உன்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒன்று முப்பத்தாறு வருடங்களாக காவலாக நிற்க அதன் காலம் முடிந்து அது பிறவிக்கு செல்ல ஆயத்தமாகிறது அதன் தேவைகளை செவ்வனே செய்து வை அது உன் தலைமுறையை காக்கும்,
உன் மூத்த கணக்கு நிலையில்லாத புத்திக் கொண்டு திரியுது என்ற கவலை வேண்டாம் அவன் தான் உன்னை காக்கும் ரட்சகன் நாளை காலை நான் வரும் போது அரிசி பருப்பு சிறிது காய்ந்த வத்தல் எடுத்துக் கொடு
அதன் பின் உன் குல தெய்வ பூஜையை செய் தடை பட்டு கிடக்கும் மனை வேலைகள் விலகும் இப்படி சொன்னால் ரவி எனக்கு பயமாவே இருந்தது காலைல அவன் வருவான்னு பார்த்த வரவில்லை
அவன் எங்க தங்கியிருக்கான்னு கேட்டு சொல்லுடா காலைல ஒரு எட்டு பாத்துட்டு வருவோம் என்று பட படத்தப் படி கூறினாள் அம்மா
அம்மா அவன் சாம்பார் வைக்க கேட்டுருப்பான் வேறு வீட்டுல இதை விட அதிகமாக கிடைச்சிருக்கும் அதான் வரவில்லை விடுமா வந்தா பாத்துக்கலாம் என்றேன்
விளையாடாத டா ரவி எல்லாத்துலயும் அவன் எப்படி வீட்டு வேலை தடை பட்டிருக்கத சரியா சொன்னான் என்றாள் அம்மா,
வீடு கட்டுனா எல்லாரும் கடன் படுவது இயல்பு தானமா அதை சொல்லுறதுல என்ன இருக்கு என்றேன் !
சரி உன்னோட கடைசி தம்பிய பத்தி எப்படி தெரியும் அவனுக்கு என்றாள் அம்மா மறுபடி !
எனக்கு என்ன கூற என்று தெரியவில்லை சரி எதோ குருட்டு வாக்கில் சொல்லிருப்பாரு என்று சமாதன படுத்தவும் மனம் இல்லை சில வேளைகளில் சில வற்றை நம்பி தான் ஆக வேண்டும் நமக்கு அப்பாற் பட்ட சக்திகள் எத்தனையோ இருக்கத் தான் செய்கிறது என்ற நம்பிக்கை வேண்டும் நான் அமைதியாக நடந்தேன்
அம்மா மறுமுறையும் அவன் எங்க இருக்கான் என்று கேட்டு செல்லுடா என்றாள் அன்போடு

அனைத்து நாய்களும் அம்மா சமையலை ருசி பார்க்காத நாட்களே இல்லை மதிய நேரங்களில் வீட்டின் பின் புறம் கூட்டமாக நான்கு ஐந்து நாய்கள் எப்போதும் காவல் இருக்கும் அம்மா உணவுடன் வெளி வந்ததும் அவைகளின் ஆரவாரம் அற்புதம் தான் அதன் விளையாட்டும் கெஞ்சலும் கொஞ்சலுமாக பார்க்கவே ஆனந்தமாக இருக்கும்
அப்படியே வீடு வந்து சேர்ந்தோம்
தொடரும் ....
0 Comments
நன்றி